fredag den 15. januar 2010

திருவிளக்கு பூஜை எப்படிச் செய்வது?

வழிபாட்டின் விளக்கங்கள்

திருவிளக்கு வழிபாட்டில் 19 பகுதிகள் உள்ளன. அவற்றை விவரமாக பார்ப்போம்.
1. திருவிளக்கு வழிபாட்டின் சிறப்பு
2. தேவையான பொருட்கள்
3. பூஜைக்குத் தயாராகுதல்
4. கணபதி வாழ்த்து
5. தீபம் ஏற்றி ஆவாஹனம் செய்தல்
6. தேவி வாழ்த்து
7. திருவிளக்கு அகவல்
8. திருவிளக்குப் பாடல்
9. கலசபூஜை
10. அர்ச்சனை செய்யும் முறை
11. அர்ச்சனை 108
12. போற்றுதல் முறை
13. போற்றுதல் 108
14. நிவேத்யம்
15. பாட்டு
16. தீபாராதனை
17. வலம்வருதல்
18. மங்களம்
19. பிராரத்தஆனை
1. திருவிளக்கு வழிபாட்டின் சிறப்பு
திருவிளக்கு வழிபாடு பெரும்பாலும் பெண்களால் நடத்தப்படுகிறது. கன்னியரும் சுமங்கலிகளும் மாலைப்பொழுது திருவிளக்கேற்றி குடும்பத்தினருடன் இவ்வழிபாடு செய்தால் அஷ்டலட்சுமிகளும் அங்கே குடிகொண்டு எல்லா நன்மைகளும் அருள்வர். வாழ்வில் தூய்மையும் தெய்வத்தன்மையும் பெருகும். சஞ்சலமும் வறுமையும் நீங்கும். சக்தியும் வளமையும் நிறையும். பேய், பிசாசு, பில்லி, சூனியம் அணுகாது.
ஊர்கள் தோறும் ஆலயங்களில் பெண்கள் ஒன்று சேர்ந்து ஆளுக்கொரு திருவிளக்கேற்றி வழிபாடு செய்தால் ஆன்மீக ஒருமைப்பாடும் அன்புணர்வும் வளரும். ஆலயத்தின் அருள் அலைகள் ஊரெங்கும் பரவும். அவ்வூரிலிருந்து தீயவை அனைத்தும் அகலும். அன்பும், அறனும், அமைதியும் நிலவி எல்லோரும் நல்லோராய் வாழ்ந்து எல்லா நலன்களும் பெறுவர்.
2. தேவையான பொருடகள்
திருவிளக்கு, வாழை இலை, வெற்றிலை, பாக்கு, நிவேதனப்பொருட்களான பழம், அவல், பொரி, கற்கண்டு முதலியன. திருநீறு, குங்குமம், சந்தனம், உதிரி பூ, ஊதுபத்தி, துளசி, கற்பூரம், ஊதுபத்தி வைக்கும் தட்டு, கற்பூரத்தட்டு, எண்ணெய் திரி, தீப்பெட்டி, ஒரு செம்பு தீர்த்தம் (கலசம்), அரிசி, மஞ்சள் முதலியன.
3. பூஜைக்குத் தயாராகுதல்
(i) திருவிளக்கை சுத்தம் செய்தல்
திருவிளக்கைச் சுத்தமான உமியால் விளக்கி, தூயநீரால் திருமுழுக்காட்டி சுத்தமான துணியால் துடைக்க வேண்டும். திருவிளக்கைச் சுத்தம் செய்யும்போது தெய்வநாமங்களை மனதில் ஜெயித்துக்கொண்டே செய்யவேண்டும்.
(ii) பீடம் அமைத்தல்
திருவிளக்கை வைக்கவேண்டிய பீடத்தை அல்லது இடத்தை சாணத்தால் மெழுகி மாக்கோலம் இட்டு தூய்மையாக அமைக்கவேண்டும். திருவிளக்குகளை எல்லோரும் வலம்வர வசதியாக இடம் விட்டு ஒழுங்குபடுத்தி வைக்கவேண்டும்.
(iii) அலங்காரம் செய்தல்
திருவிளக்கை அதற்கென அமைக்கப்பட்ட பீடத்தில் அல்லது இடத்தில் வைத்து தூயநீரில் திருநீற்றைக் குழைத்து முறையாகப் பூசி சந்தனத்தாலும் குங்குமத்தாலும் பொட்டுகள் இட்டு மலர்ச் சரங்களால் அலங்காரம் செய்ய வேண்டும் கலசத்துக்கும் சந்தனம், குங்குமத்தால் பொட்டுகள் இடவேண்டும்.
(iv) பூஜைக்கு அமருதல்
திருவிளக்கில் எண்ணெய்விட்டு, குறைந்தபட்சம் இரண்டு திரிகள் போடவேண்டும். திருவிளக்கருகில் வாழையிலை இட்டு அதில் நிவேதனப் பொருட்களைப் படைக்க வேண்டும். ஊது பத்திகளை அதற்குரிய தட்டில் வைக்க வேண்டும். நிவேதனம் செய்யும் பழத்தில் குத்தி வைக்கக்கூடாது. கற்பூரத் தட்டில் சிறிதளவு திருநீறு வைத்து அதன்மேல் கற்பூரம் வைத்து அருகில் வைக்க வேண்டும். கற்பூரத் தட்டு இல்லாதவர்கள் வெற்றிலை அல்லது வாழையிலையைப் பயன்படுத்தலாம். ஆனால் நிவேதனம் செய்யும் வெற்றிலையைப் பயன்படுத்தலாகாது.
பூஜை செய்பவர் முதலில் திருவிளக்கிற்கு நமஸ்காரம் செய்து அமரவேண்டும். திருவிளக்கு வழிபாட்டினை நடத்துபவர் முதல் விளக்கருகில் அமர்ந்து கொள்ள வேண்டும்.
எல்லோரும் சொல்லுக : ஓம்.
ஸர்வே பவந்து ஸ¥கின :
ஸர்வே ஸந்து நிராமயா :
ஸர்வே பத்ராணி பஸ்யந்து
மா கச்சித் துக்கபாக் பவேத்
4. கணபதி வாழ்த்து
(i) ஐந்து கரத்தினை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்று கின்றேனே.
(ii) கஜானனம் பூதகணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷ¢தம்
உமாஸ¤தம் சோக விநாச காரணம்
நமாமி, விக்னேஸ்வர பாதபங்கஜம்
ஓம் ஸ¤முகாய நம:
ஓம் கபிலாய நம:
ஓம் லம்போதராய நம:
ஓம் விக்ன ராஜாய நம:
ஓம் தூம கேதவே நம:
ஓம் பாலசந்த்ராய நம:
ஓம் வக்ரதுண்டாய நம:
ஓம் ஹேரம்பாய நம:
ஓம் ஏகதந்தாய நம:
ஓம் கஜகர்ணிகாய நம:
ஓம் விகடாய நம:
ஓம் கணாதிபாய நம:
ஓம் கணாத்யஷாய நம:
ஓம் கஜானனாய நம:
ஓம் ஸ¥ர்ப்பகர்ணாய நம:
ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம:
ஓம் ஸ்ரீ விக்னேஸ்வர ஷோடஸ நாமாவளி நானாவித மந்த்ர, பரிமள பத்ர புஷ்பாணி சமர்ப்பயாமி
5. தீபம் ஏற்றி ஆவாஹனம் (எழுந்தருளல்) செய்தல்
கோவிலிலிருந்து தீபம் கொண்டுவந்து முதல் விளக்கை ஏற்றுக. அதனைத் தொடர்ந்து எல்லோரும் தீபம் ஏற்றவேண்டும்.
தீபம் ஏற்றும்போது
''ஓம் ஒளிவளர் விளக்கே போற்றி''
என்று சொல்ல வேண்டும். ஊதுபத்தி ஏற்றி வைக்கவும். பின் கீழ்வரும் பிரார்த்தனையைக் கேட்டுச் சொல்ல வேண்டும்.
''ஆதிபராசக்தி அம்பிகையே, நாங்கள் ஏற்றி வழிபடும் இந்தத் திருவிளக்கிலும் எங்கள் உள்ளத்திலும் எழுந்தருளி எங்களுக்கு வேண்டிய எல்லா நன்மைகளும் தந்தருள்வாயாக''.
6. தேவி வாழ்த்து
ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே
ஸர்வார்த்த சாதிகே
சரண்யே த்ரயம்பகே கெளரி
நாராயணி நமோஸ்துதே
ஸ்ருஷ்டி ஸ்திதி விநாசானாம்
சக்திபூதே சனாதனி
குணாச்ரயே குணமயே
நாராயணி நமோஸ்துதே
சரணாகத தீனார்த்த
பரித்ராண பராயணே
ஸர்வஸ்யார்த்தி ஹரே தேவி
நாராயணி நமோஸ்துதே
7. திருவிளக்கு அகவல்
விளக்கே திருவிளக்கே வேந்தன் உடன்பிறப்பே
ஜோதி மணிவிளக்கே சீதேவிப் பொன்மணியே
அந்தி விளக்கே அலங்கார நாயகியே
காந்தி விளக்கே காமாக்ஷ¢ தாயாரே
பசும்பொன் விளக்கு வைத்து பஞ்சுத் திரி போட்டு
குளம்போல எண்ணெய்விட்டு கோலமுடன் ஏற்றி வைத்தேன்
ஏற்றினேன் திருவிளக்கு எந்தன் குடிவிளங்க
மாளிகையில் சோதியுள்ள மாதாவைக் கண்டு மகிழ்ந்தேன் யான்
மாங்கல்யப் பிச்சை மடிப்பிச்சை தாருமம்மா
சந்தானப்பிச்சை தனங்களும் தாருமம்மா
பெட்டி நிறைய பூஷணங்கள் தாருமம்மா
பட்டி நிறைய பால் பசுவைத் தாருமம்மா
புகழுடம்பைத் தாருமம்மா பக்கத்தில் நில்லுமம்மா
அல்லும் பகலும் என் அண்டையில் நில்லுமம்மா
வந்த வினையகற்றி மகாபாக்கியம் தாருமம்மா
தாயாரே உன்றன் தாளடியில் சரணடைந்தேன்
மாதாவே உன்றன் மலரடியில் நான்பணிந்தேன்.
8. திருவிளக்குப் பாடல்
(ரகுபதி ராகவ அல்லது நீலக்க்கடலின் ஓரத்தில் மெட்டு)
மங்கலப் பொருளாம் விளக்கிதுவே
மாதர் ஏற்றும் விளக்குதுவே
பொங்கும் மனத்தால் நித்தமுமே
போற்றி வணங்கும் விளக்கிதுவே
இருளை நீக்கும் விளக்கிதுவே
இன்பம் ஊட்டும் விளக்கிதுவே
அருளைப் பெருக்கும் விளக்கிதுவே
அன்பை வளர்க்கும் விளக்கிதுவே
இல்லம் தன்னில் விளக்கினையே
என்றும் ஏற்றித் தொழுதிடவே
பல்வித நன்மை பெற்றிடலாம்
பாரில் சிறந்தே வாழ்ந்திடலாம்
விளக்கில் ஏற்றும் ஜோதியினால்
விளங்காப் பொருளும் துலங்கிடுமே
விளக்கில் விளங்கும் ஜோதிதனை
விமலை என்றே உணர்ந்திடுவோம்.
9. கலச பூஜை
கலசத்திலுள்ள தண்ணீரில் அட்சதை (அரிசி, மஞ்சள்) இட்டு உள்ளங்கையால் கலசத்தை மூடிக்கொண்டு, இம்மந்திரம் ஜெபிக்க வேண்டும்.
''கங்கே ச யமுனே சைவ
கோதாவரி ஸரஸ்வதி
நர்மதே ஸிந்து காவேரி
ஜலேஸ்மின் ஸன்னிதிம் குரு''
பின் தீர்த்தத்தை ஆசமனம் பண்ண வேண்டும். (சிறிதளவு உள்ளங்கையில் விட்டுப் பருக வேண்டும். பின் சிறிது நீர்விட்டு கையைச் சுத்தம் செய்ய வேண்டும்.) அதன்பின் ஒரு மலரைத் தீர்த்தத்தில் நனைத்து, புஷ்பங்களிலும் நைவேத்தியத்திலும் நீரைத் தெளிக்க வேண்டும்.
பின் கீழ்வருமாறு சொல்லுக :
ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை - அண்டமெல்லாம்
பூத்தாளை மாதுளம்பூ நிறத்தாளை - புவியடங்கக்
காத்தாளை அங்கையில் பாசாங்குசமும் - கரும்பு வில்லும்
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கு இல்லையே
10. அர்ச்சனை செய்யும் முறை
ஆள்காட்டிவிரல் தவிர இதர விரல்களால் குங்குமத்தையும் மலர்களையும் எடுத்து, இடது கை நெஞ்சோடு சேர்த்து வைத்து, விளக்கின் அடிப்பாகத்தை அம்பிகையின் பாதார விந்தங்களாக பாவித்து அர்ச்சனை செய்ய வேண்டும். முதலில் குங்குமத்தால் 54 அர்ச்சனைகளும் பின் கன்யாகுமரியை நம: என்று தொடங்கி 54 அர்ச்சனைகள் மலர்களாலும் அவ்விதம் மொத்தம் 108 அர்ச்சனைகள் செய்ய வேண்டும்.
- தொடரும்
- நன்றி: சுவாமி மதுரானந்தர், வெள்ளிமலை ஆஸ்ரமம், கன்னியாகுமரி

mandag den 11. januar 2010

ஜென் கதைகள்

மாணவன் ஒருவன் சண்டைக் கலையை கற்றுக் கொள்வதற்காக ஜென் குரு ஒருவரிடம் சென்றான். குருவே, யுத்தக் கலையை உங்களிடமிருந்து கற்றுக் கொள்ள விரும்புகிறேன். அதே நேரத்தில் மற்றொரு பாணியைக் கற்றுக்கொள்ள வேறொரு குருவிடமும் சேரலாம் என்று நினைக்கிறேன். இது குறித்து உங்கள் ஆலோசனையும் அனுமதியும் தேவை என்றான். "இரு முயல்களைத் துரத்தும் வேட்டைக்காரனால் ஒன்றைக் கூடப் பிடிக்க முடியாது'' என்று சொல்லி இடத்தை விட்டு நகர்ந்தார் குரு.

போர்வீரன் ஒருவன் ஜென் குருவை அணுகிக் கேட்டான். "ஐயா, சொர்க்கம் அல்லது நரகம் என்று உண்மையிலேயே ஏதாவது இருக்கிறதா?'' அவனுடைய கேள்விக்குப் பதில் சொல்லாமல் அவனைப் பார்த்துக் கேட்டார் குரு- "நீ உண்மையிலேயே ஒரு போர்வீரனா? பார்த்தால் பிச்சைக்காரன் போல இருக்கிறாய். உன்னைத் தன் படைவீரனாக நியமித்திருக்கும் உன்னுடைய அரசன் எப்பேர்ப்பட்ட பிச்சைக்காரனாக இருப்பான்?'' போர்வீரன் கடுங்கோபத்துடன் வாளை உறையில் இருந்து உருவத் துவங்கினான். ஓஹோ. வாளை வைத்திருக்கிறாயோ? அதற்கு என் தலையை சீவும் வல்லமை இருக்கிறதா என்று கேட்டார் குரு. அவன் ஏறத்தாழ அவர் தலையை சீவத் தயார் ஆனான். அவன் கையைப் பிடித்து நிறுத்தி குரு சொன்னார் "இப்போது நரகத்தின் கதவுகள் திறக்கின்றன'' அவன் ஒருவாறு சமாளித்து தலைகுனிந்து வெட்கி அவரை வணங்கி நின்றான். குரு சொன்னார்- "இப்போது சொர்க்கத்தின் கதவுகள் திறந்து விட்டன

ஒரு ஜென் குருவின் சீடன் மற்றொரு குருவின் சீடனை வழியில் சந்தித்தான். ஒரு சீடன் மற்றவனிடம் சொன்னான். எங்கள் குரு பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டுவார். 'சொல்லப்போனால் அவர் நிகழ்த்திக் காட்டாத அற்புதங்களே இல்லை என்று சொல்லலாம். உன்னுடய குரு என்ன அற்புதம் நிகழ்த்துவார்?' என்று கேட்டான். இன்னொரு சீடன் சொன்னான் ஞுஎங்கள் குரு நிகழ்த்தும் மாபெரும் அற்புதம் என்னவென்றால் யாதொரு அற்புதத்தையும் நிகழ்த்தாது இருப்பதுதான்'.

வியாஸன்

onsdag den 30. december 2009

புத்தாண்டு வாழ்த்துக்கள்

அனைவருக்கும் எமது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

torsdag den 26. november 2009

சுயமுன்னேற்றம்

ஏன் நாம் நமது நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துவதில்லை என்பது பற்றி அலெக்டுமெக்கன்சி ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். காலத்தைச் சரிவரப் பயன்படுத்தாமைக்கு அவர் கூறும் காரணங்கள்.

நாம் அடைய விரும்பும் இலட்சியங்களைப் பற்றிய திட்டங்கள் நம்மிடம் இல்லை. எது முக்கியம் என்ற தெளிவில்லை. எனவே திசை தெரியாமல் இருளில் துழாவிக் கொண்டிருக்கிறோம்; நேரம் போய்விடுகிறது.

யார் வந்தாலும் பார்க்கலாம் என்ற “திறந்த கதவு” கொள்கையினால் நேரம் பறிபோய்விடுகின்றது.

ஒத்திப்போடும் மனோ பாவம், சோம்பல்.
எடுத்த காரியங்களின் விளைவுகள் பற்றிய செய்திகள் நமக்குச் சரியாக வந்து சேருவதில்லை; காலம் விரயமாகிறது.

ஏதோ புத்தகம் பேப்பர் கிடைத்தது என்று எல்லா குப்பைகளையும் படிக்கிறோம். படிப்பதை ஒரு பொழுது போக்காய்க் கொள்கிறோம். நேரம் போய்விடுகிறது.

வேலை செய்து கொண்டிருக்கும் போது அடிக்கடி பிறர் உள்ளே நுழைகிறார்கள். வேலை தடைபடுகிறது.
போனில் வளவளவென்று ‘அக்கப்போர்’ பேசுகிறோம். டெலிபோன் ஒரு செய்தியை தெரிவிப்பதற்குத்தான் இருக்கிறது.

குப்பை விஷயங்கள் எல்லாம் உம் மேஜைக்கு வருகின்றன. எல்லாவற்றையும் படித்து தொலைக்கிறீர்கள்.
எந்தக் கடிதத்தை எங்கு வைத்தோம்? அதை எப்படி உடனே எடுப்பது? என்பதில் ஒரு வழிமுறை இல்லாமல் திண்டாடுகிறீர்கள்.

போதுமான குமாஸ்தாக்கள் இல்லை எல்லாம் நீங்களே செய்ய வேண்டியிருக்கிறது. உங்கள் பொன்னான நேரம் போயிற்று.
பல வேலைகளை இழுத்துப் போட்டுக் கொள்கிறீர்கள். ஒன்றிலும் கவனமில்லாமல் ஒன்றும் சரிவரச் செய்யப்படாமல் போய்விடுகிறது.
சும்மா ‘சலசல’ வென்று பேசுகிறீர்கள். பேச்சைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

எதையும் மறுத்துப்பேச முடியாது உங்களால். எதையும் இல்லை என்றோ தவறு என்றோ கூறமுடியாது உங்களால். எனவே எல்லாவற்றிற்கும் இசைந்து கொடுக்கிறீர்கள். எது நன்மை என்று தெரிந்திருந்தும் அதில் கண்டிப்பாக இல்லாதததால் நீங்கள் நினைப்பது நடப்பதில்லை. காலம் வீணாகிறது.

- டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி

mandag den 5. oktober 2009

எண்ணங்கள் - அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி

"எண்ணத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் எண்ணங்கள்தாம் சொற்களாகின்றன.

சொல்லில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் சொற்கள்தாம் செயல்களாகின்றன.

செயலில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் செயல்கள்தாம் பழக்கங்களாகின்றன.

பழக்கத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் பழக்கங்கள்தாம் ஒழுக்கங்களாகின்றன.

ஒழுக்கத்தில் கவனமாய் இருங்கள்;
ஏனெனில் ஒழுக்கம்தான் உங்கள் வாழ்வை வடிவமைக்கின்றது!"

tirsdag den 15. september 2009

மைக்கேல் ஜாக்ஸன் :கிருஷ்ணா டாவின்ஸி

அந்த நாட்களை நன்றாக நினைவிருக்கிறது. எண்பதுகளின் இறுதியான அது என் கல்லூரிப் பருவம். இசைப்பித்து தலைக்கேறியிருந்த காலம். என்னையும் சேர்த்து சுமாராக ஹாலோ கிடார் வாசிக்கத் தெரிந்த இருவர், (ஒருவர் ‘லீட்’ மற்றொருவர் ‘ரிதம்’ என்று பந்தா விடுவோம் ), ஒரு டபுள் பேஸ் வாசிப்பவன், சாதாரண காஸியோ கீபோர்ட் வாசிப்பவன் மற்றும் இரண்டு உள்ளூர் பாடகர்களை வைத்துக் கொண்டு நாங்கள் அடித்த அமெசுர் இசைக்குழு லூட்டி கொஞ்ச நஞ்சமல்ல. அப்போது இரண்டு விஷயங்கள்தான் பேசுவதற்கு விருப்பமானதாக இருந்தன. ஒன்று கிரிக்கெட், இரண்டாவது இசை.

பொதுவாகவே இந்தியத் திரை இசையில் அப்போது ஒரு தேக்கம் நிலவியது. இந்திப் பாடல்கள் எல்லாம் அலுத்து விட்டன. தமிழ்ப்பாடல்களிலும் ஒருமுகத்தன்மை வந்திருந்தது. அப்போதுதான் நாங்கள் மெதுவாக மேற்கத்திய இசையிடம் தாவினோம். அதற்கு முக்கியமான காரணம் மைக்கேல் ஜாக்ஸனின் “திரில்லர்’’ இசை ஆல்பம். போனி எம், அபா, டிஸ்கோ ஜூரம் எல்லாம் ஓய்ந்து போயிருந்த நேரத்தில் ‘ரிதம் அண்ட் ப்ளூஸ்’ ( மெலிதான சோக இசை) மற்றும் ‘soul’ இசையில் பிளந்து கட்டிய ஜாக்ஸனின் அதிரடி இசை கேட்டு நாங்கள் ஆடிப்போயிருந்தோம். காஸட் நாடா அறுந்து போகும் வரை தொடர்ந்து சோறு தண்ணியில்லாமல் ‘திரில்லர்’ பாடல்களைக் கேட்டுக் கொண்டே இருந்தோம்.

திரில்லர் ஆல்பத்துக்காக ஏகப்பட்ட கிராமி அவார்டுகளை அள்ளி, உலகெங்கும் நாற்பது மில்லியன் காஸெட்டுகளுக்கு மேல் விற்ற மைக்கேல் ஜாக்ஸனின் இசையில் பைத்தியமாகி, அவரின் ஏனைய பாடல்களெல்லாம் எங்கே சல்லிசாகக் கிடைக்கும் என்று எங்கள் இளைஞர் அணிப் பட்டாளமே சென்னையை அலசியது. கடைசியில் பாரிஸ் கார்னர், பர்மா பஜாரின் கடைசி பகுதியில் ஒளிந்திருந்த இதயத்துல்லா என்பவரின் காஸட் கடையைக் கண்டுபிடித்தோம். மிகச் சிறிய கடைதான், ஆனால் அங்கே பல பொக்கிஷங்களை காஸட் வடிவத்தில் அடுக்கியிருந்தார். வெறும் ஒரு காஸட் கடைக்காரராக மட்டுமே அல்லாமல் மேற்கத்திய இசை மற்றும் உலக சினிமாவைக் கரைத்துக் குடித்த மிகப்பெரும் கலாரசிகராகவும் அவர் இருந்தார். மைக்கேல் ஜாக்ஸனின் சிறு வயது ஆல்பமான “ஆப் தி வால்’’ ஐக் கொடுத்து “இதைப் பாடும் போது அவருக்கு 11 வயசு’’ என்றது எங்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஆல்பத்தைக் கேட்டபோது இத்தனை சின்னச் சிறுவன் இவ்வளவு அற்புதமாகப் பாடுவானா என்று மலைப்பாகவும் இருந்தது. “ப்ராடிஜி’’ ( இளம் மேதை ) என்கிற சொல் அப்போதுதான் எனக்கு அறிமுகமானது.

மைக்கேல் ஜாக்ஸன் ஓர் ஆரம்பம்தான். அதற்குப் பிறகு இதயத்துல்லாவின் கடையில் ( இப்போது அது இல்லை ) டினா டர்னர், தி போலீஸ், டேவிட் போவி, டுரான் டுரான், லயனல் ரிச்சி, பில்லி ஓஷன், ப்ரூஸ் ஹார்ன்ஸ்பி, ப்ரூஸ் ஸ்பிரிங்ஸ்டீன், குயின், சிம்ப்ளி ரெட், எரித்மிக்ஸ், டிரேஸி சாப்மென், டான் சீல்ஸ் என்று ஏகப்பட்ட அற்புத இசைக்கலைஞர்களையும் குழுக்களையும் கண்டுபிடித்தோம். மேற்கத்திய இசையில் இருந்த பாப், ரகே, ரிதம் அண்ட் ப்ளூஸ், ஜாஸ், ராக், ராப், ஆப்ரிக்கா, லாட்டினோ, சாப்ட் ராக், ஹெவி மெட்டல், கண்ட்ரி போன்ற ஏகப்பட்ட இசை வகைகள் எங்களை ஒரு போதை உலகத்துக்கே அழைத்துச் சென்றன. ‘ஸ்டிங்’ போன்ற இசைக்கலைஞர்கள் தங்கள் பாடல்களில் கொண்டு வந்திருந்த அரபி சுபி இசையும் மலைக்க வைத்தது. அடடா இப்படி ஒரு பிருமாண்டமான இசை உலகம் இருக்கிறதா என்று பிரமிப்பாக இருந்தது.

இதற்கெல்லாம் ஓர் ஆரம்பமாக இருந்தவர் மைக்கேல் ஜாக்ஸன். அவருடைய இசை இழுத்த இழுப்புக்குத்தான் நாங்கள் ஓடினோம். முதலில் திரில்லர் ஆல்பத்தில் இருந்த “பீட் இட்’’ “பில்லி ஜீன்’’ “வான பி ஸ்டார்ட்டிங் சம்திங்’’ மற்றும் “திரில்லர்’’ இந்த நான்கு பாட்டுக்களை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தேன். அந்தப் பாடல்கள் எல்லாமே அதிரடி இசையாலும் அசர வைக்கும் வீடியோக்களாலும் பிரபலமானவை. அதுநாள் வரை சட்டை செய்யாமலே இருந்த திரில்லர் ஆல்பத்தின் மற்ற பாடல்களை மெதுவாகக் கேட்டபோதுதான், அடடா எத்தனை பெரிய இசைப் புதையலை இத்தனை நாள் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டோமே என்று வருத்தமாகியது. “pretty young thing” , “lady in my life” “humen nature”, “the girl is mine” போன்ற அந்தப் பாடல்களில் இருந்த மென்மையும் பாவமும் உயிரையே உருக்கியது. மைக்கேல் ஜாக்ஸன் வெறும் அதிரடிப் பாடகர் மட்டும் அல்ல அவர் ஒரு மெலடி கிங்கும்தான் என்பது தெரிய வந்தது.

மைக்கேல் ஜாக்ஸன் வார்த்தைகளே கொஞ்சமும் புரியாதபடி பாடுவதில் பெரிய கில்லாடி.

“anne, are you ok?” என்கிற வார்த்தையை அவர் எப்படிப் பாடுவார் என்பதை “smooth criminal” பாடலில் கேட்டுப் பார்த்தால் உங்களுக்குத் தெரியும். வார்த்தைகளை வளைத்து, இழுத்து, பிசைந்து ஒரு வழி ஆக்கி விடுவார். பல பாடல்களின் அர்த்தம் புரியவில்லையே என்று வருத்தமாக இருந்தது. ஒரு நண்பனின் வீட்டில் மைக்கேல் ஜாக்ஸனின் பல பாடல்களின் கவிதைவரிகளின் தொகுப்பு திடீரென்று கிடைத்தது. அதைக் கையில் வைத்துக் கொண்டு (பெரும்பாலான பாடல்களை எழுதியது அவர்தான்) அந்தப் பாடல்களைக் கேட்ட போது ஏற்பட்ட பரவசநிலை சொல்லில் விளங்காதது. பாடல் வரிகளைத் தன் குரல் என்னும் முரட்டுக் குதிரையில் ஏற்றி அவர் பாடும் முறை யாராலும் காப்பி அடிக்க முடியாத ஒன்று. ஸ்பீல்பர்க் சொன்னார். “பாப் இசையில் எத்தனையோ பேர் இருக்கிறார்கள், ஆனால் மைக்கேல் ஜாக்ஸனும் இருக்கிறார்”. அதையே இன்னும் கொஞ்சம் மாற்றிச் சொல்லத் தோன்றுகிறது. “பாப் இசையில் எத்தனையோ குரல்கள் இருக்கின்றன. மைக்கேல் ஜாக்ஸனின் குரலும் இருக்கின்றது.”

சிறுவயதில் தனக்கு ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து வாழ்க்கையில் நிகழ்ந்த எத்தனையோ சம்பவங்களை ஒரு புத்தகமாக “மூன்வாக்கர்’’ என்கிற தலைப்பில் எழுதியிருக்கிறார் ஜாக்ஸன். ஓர் இசைக்கலைஞனின் வாழ்க்கையைப் பற்றிய அற்புதப் படைப்பு அது.

மைக்கேல் ஜாக்ஸனின் பெரும்பாலான பாடல்கள் சமூக அக்கறையுடன் எழுதப்பட்டவையே. பல பாடல்களை அவரே எழுதினார். அதில் மிகப் பிரபலமான பாட்டு “வி ஆர் தி வேர்ல்ட்”. ஆப்பிரிக்காவில் லட்சக்கணக்கான மக்கள் பஞ்சத்தால் இறந்த போது அவர்களுக்கான நிதி திரட்ட இசை ஆல்பத்தில் ஜாக்ஸன் அந்தப் பாட்டை இயற்றி சக இசைக்கலைஞர்களுடன் சேர்ந்து பாடினார். நிறவெறி, யுத்த வெறிக்கான எதிர்ப்பு, உலக அமைதிக்கான கோரிக்கைகள், கறுப்பின மக்களின் துயர்கள், காடுகளை அழிப்பதை எதிர்ப்பது, போன்றவை மட்டுமில்லாமல் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் நிகழ்ந்த சில சம்பவங்களின் பாதிப்புகள் என்று அவருடைய இசை ரத்தமும் சதையுமாகப் பொங்கி வழிந்தது. உலகிலேயே தொண்டு நிறுவனங்களுக்காக அதிக நிதி கொடுத்த இசையமைப்பாளர் (சுமார் 39 நிறுவனங்கள்) என்கிற சாதனைக்காக கின்னஸ் புத்தகம் அவரது பெயரைப் பொறித்திருக்கிறது.

“நான் என்றென்றும் இருப்பேன்’’ என்பது அவருடைய இன்னொரு பாடலின் பெயர். உண்மைதான். அவர் இசை என்றைக்கும் மரணமடையாது. அந்த நாட்களை நன்றாக நினைவிருக்கிறது. எண்பதுகளின் இறுதியான அது என் கல்லூரிப் பருவம். இசைப்பித்து தலைக்கேறியிருந்த காலம். என்னையும் சேர்த்து சுமாராக ஹாலோ கிடார் வாசிக்கத் தெரிந்த இருவர், (ஒருவர் ‘லீட்’ மற்றொருவர் ‘ரிதம்’ என்று பந்தா விடுவோம் ), ஒரு டபுள் பேஸ் வாசிப்பவன், சாதாரண காஸியோ கீபோர்ட் வாசிப்பவன் மற்றும் இரண்டு உள்ளூர் பாடகர்களை வைத்துக் கொண்டு நாங்கள் அடித்த அமெசுர் இசைக்குழு லூட்டி கொஞ்ச நஞ்சமல்ல. அப்போது இரண்டு விஷயங்கள்தான் பேசுவதற்கு விருப்பமானதாக இருந்தன. ஒன்று கிரிக்கெட், இரண்டாவது இசை.

பொதுவாகவே இந்தியத் திரை இசையில் அப்போது ஒரு தேக்கம் நிலவியது. இந்திப் பாடல்கள் எல்லாம் அலுத்து விட்டன. தமிழ்ப்பாடல்களிலும் ஒருமுகத்தன்மை வந்திருந்தது. அப்போதுதான் நாங்கள் மெதுவாக மேற்கத்திய இசையிடம் தாவினோம். அதற்கு முக்கியமான காரணம் மைக்கேல் ஜாக்ஸனின் “திரில்லர்’’ இசை ஆல்பம். போனி எம், அபா, டிஸ்கோ ஜூரம் எல்லாம் ஓய்ந்து போயிருந்த நேரத்தில் ‘ரிதம் அண்ட் ப்ளூஸ்’ ( மெலிதான சோக இசை) மற்றும் ‘soul’ இசையில் பிளந்து கட்டிய ஜாக்ஸனின் அதிரடி இசை கேட்டு நாங்கள் ஆடிப்போயிருந்தோம். காஸட் நாடா அறுந்து போகும் வரை தொடர்ந்து சோறு தண்ணியில்லாமல் ‘திரில்லர்’ பாடல்களைக் கேட்டுக் கொண்டே இருந்தோம்.

திரில்லர் ஆல்பத்துக்காக ஏகப்பட்ட கிராமி அவார்டுகளை அள்ளி, உலகெங்கும் நாற்பது மில்லியன் காஸெட்டுகளுக்கு மேல் விற்ற மைக்கேல் ஜாக்ஸனின் இசையில் பைத்தியமாகி, அவரின் ஏனைய பாடல்களெல்லாம் எங்கே சல்லிசாகக் கிடைக்கும் என்று எங்கள் இளைஞர் அணிப் பட்டாளமே சென்னையை அலசியது. கடைசியில் பாரிஸ் கார்னர், பர்மா பஜாரின் கடைசி பகுதியில் ஒளிந்திருந்த இதயத்துல்லா என்பவரின் காஸட் கடையைக் கண்டுபிடித்தோம். மிகச் சிறிய கடைதான், ஆனால் அங்கே பல பொக்கிஷங்களை காஸட் வடிவத்தில் அடுக்கியிருந்தார். வெறும் ஒரு காஸட் கடைக்காரராக மட்டுமே அல்லாமல் மேற்கத்திய இசை மற்றும் உலக சினிமாவைக் கரைத்துக் குடித்த மிகப்பெரும் கலாரசிகராகவும் அவர் இருந்தார். மைக்கேல் ஜாக்ஸனின் சிறு வயது ஆல்பமான “ஆப் தி வால்’’ ஐக் கொடுத்து “இதைப் பாடும் போது அவருக்கு 11 வயசு’’ என்றது எங்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஆல்பத்தைக் கேட்டபோது இத்தனை சின்னச் சிறுவன் இவ்வளவு அற்புதமாகப் பாடுவானா என்று மலைப்பாகவும் இருந்தது. “ப்ராடிஜி’’ ( இளம் மேதை ) என்கிற சொல் அப்போதுதான் எனக்கு அறிமுகமானது.

மைக்கேல் ஜாக்ஸன் ஓர் ஆரம்பம்தான். அதற்குப் பிறகு இதயத்துல்லாவின் கடையில் ( இப்போது அது இல்லை ) டினா டர்னர், தி போலீஸ், டேவிட் போவி, டுரான் டுரான், லயனல் ரிச்சி, பில்லி ஓஷன், ப்ரூஸ் ஹார்ன்ஸ்பி, ப்ரூஸ் ஸ்பிரிங்ஸ்டீன், குயின், சிம்ப்ளி ரெட், எரித்மிக்ஸ், டிரேஸி சாப்மென், டான் சீல்ஸ் என்று ஏகப்பட்ட அற்புத இசைக்கலைஞர்களையும் குழுக்களையும் கண்டுபிடித்தோம். மேற்கத்திய இசையில் இருந்த பாப், ரகே, ரிதம் அண்ட் ப்ளூஸ், ஜாஸ், ராக், ராப், ஆப்ரிக்கா, லாட்டினோ, சாப்ட் ராக், ஹெவி மெட்டல், கண்ட்ரி போன்ற ஏகப்பட்ட இசை வகைகள் எங்களை ஒரு போதை உலகத்துக்கே அழைத்துச் சென்றன. ‘ஸ்டிங்’ போன்ற இசைக்கலைஞர்கள் தங்கள் பாடல்களில் கொண்டு வந்திருந்த அரபி சுபி இசையும் மலைக்க வைத்தது. அடடா இப்படி ஒரு பிருமாண்டமான இசை உலகம் இருக்கிறதா என்று பிரமிப்பாக இருந்தது.

இதற்கெல்லாம் ஓர் ஆரம்பமாக இருந்தவர் மைக்கேல் ஜாக்ஸன். அவருடைய இசை இழுத்த இழுப்புக்குத்தான் நாங்கள் ஓடினோம். முதலில் திரில்லர் ஆல்பத்தில் இருந்த “பீட் இட்’’ “பில்லி ஜீன்’’ “வான பி ஸ்டார்ட்டிங் சம்திங்’’ மற்றும் “திரில்லர்’’ இந்த நான்கு பாட்டுக்களை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தேன். அந்தப் பாடல்கள் எல்லாமே அதிரடி இசையாலும் அசர வைக்கும் வீடியோக்களாலும் பிரபலமானவை. அதுநாள் வரை சட்டை செய்யாமலே இருந்த திரில்லர் ஆல்பத்தின் மற்ற பாடல்களை மெதுவாகக் கேட்டபோதுதான், அடடா எத்தனை பெரிய இசைப் புதையலை இத்தனை நாள் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டோமே என்று வருத்தமாகியது. “pretty young thing” , “lady in my life” “humen nature”, “the girl is mine” போன்ற அந்தப் பாடல்களில் இருந்த மென்மையும் பாவமும் உயிரையே உருக்கியது. மைக்கேல் ஜாக்ஸன் வெறும் அதிரடிப் பாடகர் மட்டும் அல்ல அவர் ஒரு மெலடி கிங்கும்தான் என்பது தெரிய வந்தது.

மைக்கேல் ஜாக்ஸன் வார்த்தைகளே கொஞ்சமும் புரியாதபடி பாடுவதில் பெரிய கில்லாடி.

“anne, are you ok?” என்கிற வார்த்தையை அவர் எப்படிப் பாடுவார் என்பதை “smooth criminal” பாடலில் கேட்டுப் பார்த்தால் உங்களுக்குத் தெரியும். வார்த்தைகளை வளைத்து, இழுத்து, பிசைந்து ஒரு வழி ஆக்கி விடுவார். பல பாடல்களின் அர்த்தம் புரியவில்லையே என்று வருத்தமாக இருந்தது. ஒரு நண்பனின் வீட்டில் மைக்கேல் ஜாக்ஸனின் பல பாடல்களின் கவிதைவரிகளின் தொகுப்பு திடீரென்று கிடைத்தது. அதைக் கையில் வைத்துக் கொண்டு (பெரும்பாலான பாடல்களை எழுதியது அவர்தான்) அந்தப் பாடல்களைக் கேட்ட போது ஏற்பட்ட பரவசநிலை சொல்லில் விளங்காதது. பாடல் வரிகளைத் தன் குரல் என்னும் முரட்டுக் குதிரையில் ஏற்றி அவர் பாடும் முறை யாராலும் காப்பி அடிக்க முடியாத ஒன்று. ஸ்பீல்பர்க் சொன்னார். “பாப் இசையில் எத்தனையோ பேர் இருக்கிறார்கள், ஆனால் மைக்கேல் ஜாக்ஸனும் இருக்கிறார்”. அதையே இன்னும் கொஞ்சம் மாற்றிச் சொல்லத் தோன்றுகிறது. “பாப் இசையில் எத்தனையோ குரல்கள் இருக்கின்றன. மைக்கேல் ஜாக்ஸனின் குரலும் இருக்கின்றது.”

சிறுவயதில் தனக்கு ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து வாழ்க்கையில் நிகழ்ந்த எத்தனையோ சம்பவங்களை ஒரு புத்தகமாக “மூன்வாக்கர்’’ என்கிற தலைப்பில் எழுதியிருக்கிறார் ஜாக்ஸன். ஓர் இசைக்கலைஞனின் வாழ்க்கையைப் பற்றிய அற்புதப் படைப்பு அது.

மைக்கேல் ஜாக்ஸனின் பெரும்பாலான பாடல்கள் சமூக அக்கறையுடன் எழுதப்பட்டவையே. பல பாடல்களை அவரே எழுதினார். அதில் மிகப் பிரபலமான பாட்டு “வி ஆர் தி வேர்ல்ட்”. ஆப்பிரிக்காவில் லட்சக்கணக்கான மக்கள் பஞ்சத்தால் இறந்த போது அவர்களுக்கான நிதி திரட்ட இசை ஆல்பத்தில் ஜாக்ஸன் அந்தப் பாட்டை இயற்றி சக இசைக்கலைஞர்களுடன் சேர்ந்து பாடினார். நிறவெறி, யுத்த வெறிக்கான எதிர்ப்பு, உலக அமைதிக்கான கோரிக்கைகள், கறுப்பின மக்களின் துயர்கள், காடுகளை அழிப்பதை எதிர்ப்பது, போன்றவை மட்டுமில்லாமல் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் நிகழ்ந்த சில சம்பவங்களின் பாதிப்புகள் என்று அவருடைய இசை ரத்தமும் சதையுமாகப் பொங்கி வழிந்தது. உலகிலேயே தொண்டு நிறுவனங்களுக்காக அதிக நிதி கொடுத்த இசையமைப்பாளர் (சுமார் 39 நிறுவனங்கள்) என்கிற சாதனைக்காக கின்னஸ் புத்தகம் அவரது பெயரைப் பொறித்திருக்கிறது.

“நான் என்றென்றும் இருப்பேன்’’ என்பது அவருடைய இன்னொரு பாடலின் பெயர். உண்மைதான். அவர் இசை என்றைக்கும் மரணமடையாது.

நன்றி: ஒரு புத்தகம் பேசுது

tirsdag den 28. juli 2009

அவளுக்கும் தமிழென்று பேர் - கண்ணதாசன்

அவளுக்கும் தமிழென்று பேர்
என்றும் அவளெந்தன் உள்ளத்தில்
அசைகின்ற தேர்
அசைகின்ற தேர்
அவளுக்கும் தமிழென்று பேர்
என்றும் அவளெந்தன் உள்ளத்தில்
அசைகின்ற தேர்
அசைகின்ற தேர்

அவளுக்கு நிலவென்று பேர்
வண்ண மலர் கொஞ்சும் குழலங்கம் முகிலுக்கு நேர்
அவளுக்கு குயிலென்று பேர்
அந்த குயில் கொண்ட குரல் கொண்டு கொண்டாடும் ஊர்
அவளுக்கு அன்பென்று பேர்
அவளுக்கு அன்பென்று பேர்
அந்த அன்பென்ற பொருள் நல்ல பெண்மைக்கு வேர்
பெண்மைக்கு வேர்
அவளுக்கும் தமிழென்று பேர்
என்றும் அவளெந்தன் உள்ளத்தில்
அசைகின்ற தேர்
அசைகின்ற தேர்

அவள் எந்தன் அறிவுக்கு நூல்
அவள் மொழிகின்ற வார்த்தைகள் கவிதைக்கு மேல்
கவிதைக்கு மேல்
அவளுக்கு அழகென்று பேர்
அந்த அழகெந்தன் உள்ளத்தை உழுகின்ற ஏர்
உழுகின்ற ஏர்
அவளுக்கும் தமிழென்று பேர்
என்றும் அவளெந்தன் உள்ளத்தில்
அசைகின்ற தேர்
அசைகின்ற தேர்

அவளுக்கு உயிர் என்று பேர்
என்றும் அவள் எந்தன் வாழ்வெனும் வயலுக்கு நீர்
வயலுக்குநீர்
அவள் எந்தன் நினைவுக்குத் தேன்
இந்த மனம் என்னும் கடலுக்கு கரை கண்ட வான்
அவள் எந்தன் நினைவுக்குத் தேன்
இந்த மனம் என்னும் கடலுக்கு கரை கண்ட வான்
அவளுக்கும் தமிழென்று பேர்
என்றும் அவளெந்தன் உள்ளத்தில்
அசைகின்ற தேர்
அசைகின்ற தேர்