அறுபத்துநாலு கலைகள் "ஆய கலைகள் அறுபத்துநான்கினையும்" என்று பலரும் சொல்லக் கேள்விபட்டிருக்கின்றோம். ஆனால் அந்த அறுபத்துநாலுகலைகள் தான் யாவை என்று தெரிவதில்லை.
மலேசியா தமிழ் நண்பர் மா. அங்கையாவின் தொகுப்பை கொடுத்துள்ளேன்.
'நாலு வேதம், ஆறு சாத்திரம், பதினெண் புராணம், அறுபத்துநாலு கலைஞானம்' என்பது ஆரிய இலக்கியப் பாகுபாடாதலால், 'அறுபத்துநாலு கலை' என்பது தமிழ் மரபன்று. 'அறுபத்துநாலு கலை' என்னும் பொருட்டொகப் பெயர் தமிழாதலாலும், அறுபத்துநாலாக வகுக்கப்பட்ட கலைகள் அனையவும் தமிழர்க்கும் உரியனவாதலாலும், தமிழ்க்கலைகள் ஆரியக் கலைகட்குக் காலத்தால் முந்தியனவாதலாலும், அறுபத்துநாலு கலைப்பட்டி இங்குத் தரப்பட்டுள்ளது.
அந்த அறுபத்துநாலுகலைகளின் பட்டியலைமொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் தொகுத்த செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி (A Comprehensive Etymological Dictionary of the Tamil Language ) Vol. 1 , Part - 1 பக்கம் 545-548 வரையிலும் கண்டுள்ளபடி இங்கே பட்டியலிட்டுள்ளேன். தெரிந்துகொள்ளுங்கள்.
அறுபத்துநாலுகலை (பெ.) `காமசூத்திரம்' என்னும் பழைய சமற்கிருத நூலிற் சொல்லப்பட்டுள்ள அறுபத்துநான்கு கலைகளும் அறிவியல்களும்.
அறுபத்து நாலு கலைகளாவன:
1. எழுத்திலக்கணம் (அக்கரவிலக்கணம்);
2. எழுத்தாற்றல் (லிகிதம்);
3. கணிதம்;
4. மறைநூல் (வேதம்);
5. தொன்மம் (புராணம்);
6. இலக்கணம் (வியாகரணம்);
7. நயனூல் (நீதி சாத்திரம்);
8. கணியம் (சோதிட சாத்திரம்);
9. அறநூல் (தரும சாத்திரம்);
10. ஓகநூல் (யோக சாத்திரம்);
11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்);
12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்);
13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்);
14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்);
15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்);
16. மறவனப்பு (இதிகாசம்);
17. வனப்பு;
18. அணிநூல் (அலங்காரம்);
19. மதுரமொழிவு (மதுரபாடணம்);
20. நாடகம்;
21. நடம்;
22.ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்);
23. யாழ் (வீணை);
24. குழல்;
25. மதங்கம் (மிருதங்கம்);
26. தாளம்;
27. விற்பயிற்சி (அத்திரவித்தை);
28. பொன் நோட்டம் (கனக பரீட்சை);
29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை);
30. யானையேற்றம் (கச பரீட்சை);
31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை);
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை);
33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை);
34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்);
35. மல்லம் (மல்ல யுத்தம்);
36. கவர்ச்சி (ஆகருடணம்);
37. ஓட்டுகை (உச்சாடணம்);
38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்);
39. காமநூல் (மதன சாத்திரம்);
40. மயக்குநூல் (மோகனம்);
41. வசியம் (வசீகரணம்);
42. இதளியம் (ரசவாதம்);
43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்);
44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்);
45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்);
46. நாடிப்பயிற்சி (தாது வாதம்);
47. கலுழம் (காருடம்);
48. இழப்பறிகை (நட்டம்);
49. மறைத்ததையறிதல் (முஷ்டி);
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்);
51. வான்செலவு (ஆகாய கமனம்);
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்);
53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்);
54. மாயச்செய்கை (இந்திரசாலம்);
55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்);
56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்);
57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்);
58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்);
59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்);
60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்);
61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்);
62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்);
63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்);
64 சூனியம் (அவத்தைப் பிரயோகம்).
வேறொரு பட்டியல்
1. பாட்டு (கீதம்);
2. இன்னியம் (வாத்தியம்);
3. நடம் (நிருத்தம்);
4. ஓவியம்;
5. இலைப்பொட்டுக் (பத்திர திலகம்) கத்தரிக்கை;
6. பல்வகை யரிசி பூக்களாற் கோலம் வைத்தல்;
7. பூவமளியமைக்கை;
8. ஆடையுடை பற்களுக்கு வண்ணமமைக்கை;
9. பள்ளியறையிலும் குடிப்பறையிலும் மணி பதிக்கை;
10. படுக்கையமைக்கை;
11. நீரலை அல்லது நீர்க்கிண்ண இசை (ஜலதரங்கம்);
12. நீர்வாரி யடிக்கை;
13. உள்வரி (வேடங்கொள்கை);
14. மாலைதொடுக்கை;
15. மாலை முதலியன் அணிகை;
16. ஆடையணிகளாற் சுவடிக்கை;
17. சங்கு முதலியவற்றாற் காதணியமக்கை;
18. விரை கூட்டுகை;
19. அணிகலன் புனைகை;
20. மாயச்செய்கை (இந்திரசாலம்);
21. குசுமாரரின் காமநூல் நெறி (கௌசுமாரம்);
22.கைவிரைவு (ஹஸ்தலாவகம்);
23. மடைநூலறிவு (பாகசாத்திர வுணர்ச்சி);
24. தையல்வேலை;
25. நூல்கொண்டு காட்டும் வேடிக்கை;
26. வீணை யுடுக்கைப் பயிற்சி (வீணை டமருகப் பயிற்சி);
27. விடுகதை (பிரேளிகை);
28. ஈற்றெழுத்துப் பாப் பாடுகை;
29. நெருட்டுச் சொற்றொடரமக்கை;
30. சுவைத்தோன்றப் பண்ணுடன் வசிக்கை;
31. நாடகம் உரைநடை (வசனம்) யிவற்றினுணர்ச்சி;
32. குறித்தபடி பாடுகை (ஸமஸ்யாபூரணம்);
33. பிரம்பு முத்தலியவற்றாற் கட்டில் பின்னுதல்;
34. கதிரில் நூல் சுற்றுகை;
35. மரவேலை;
36. மனைநூல் (வாஸ்து வித்தை);
37. காசு, மணி நோட்டம் (நாணய ரத்னங்களின் பரிசோதனை);
38. நாடிப்பயிற்சி (தாதுவாதம்);
39. மணிக்கு நிறமமைக்கையும் மணியின் பிறப்பிட மறிகையும்;
40. தோட்டவேலை;
41. தகர்ப்போர் சேவற்போர் முதலிய விலங்கு பறவைப்போர்;
42. கிளி நாகணங்கட்குப் பேச்சுப் பயிற்றுவகை;
43. உடம்பு பிடிக்கையும் எண்ணைய் தேய்க்கையும்;
44. குழூவுக்குறி (சங்கேதாக்ஷரங்களமத்துப் பேசுகை);
45. மருமமொழி (ரகசிய பாஷை);
46. நாட்டுமொழி யறிவு (தெசபாஷை யுணர்ச்சி);
47. பூத்தேர் (புஷ்பரதம்) அமக்கை;
48. முற்குறி (நிமித்தம்) அமைக்கை;
49. பொறியமைக்கை;
50. ஒருகாலிற் கொள்கை (ஏகசந்தக்கிராகித்வம்);
51. இருகாலிற் கொள்கை (துவிசந்தக்கிராகித்வம்);
52. பிதிர்ப்பா (கவி) விடுக்கை;
53. வனப்பு (காவியம்) இயற்றுகை;
54. உரிச்சொல்லறிவு (நிகண்டுணர்ச்சி);
55. யாப்பறிவு;
56. அணியறிவு (அலங்காரவுணர்ச்சி);
57. மாயக்கலை (சாலவித்தை);
58. ஆடையணியுந் திறமை (உடுத்தலிற் சாமர்த்தியம்);
59. சூதாட்டம்;
60. சொக்கட்டான்;
61. பாவை (பொம்மை), பந்து முதலியன வைத்தாடுகை;
62. யானயேற்றம், குதிரையேற்றம் பயிற்சி;
63. படக்கலப் பயிற்சி;
64. உடற் (தேகப்) பயிற்சி (சது.).
onsdag den 26. december 2007
tirsdag den 25. december 2007
டென்மார்க் கேர்னிங் நகரில் நடைபெற்ற பரதநாட்டிய அரங்கேற்றம் !

சுமித்திரா சுகேந்திராவின் மாணவி நீரஜா சிறீமுருகன் !
டென்மார்க் கலாக்கேந்திரா நாட்டியாலய அதிபர் திருமதி சுமித்திரா சுகேந்திராவின் மாணவி செல்வி. நீரஜா சிறீமுருகனின் பரதநாட்டிய அரங்கேற்றம் நேற்று 11.09.2004 சனிக்கிழமை மாலை 16.00 மணி முதல் 21.00 மணிவரை கேர்னிங் நோரகேத கலாச்சார இல்லத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது.
ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக நடனத்தைப் பயின்று, பரதம், சங்கீதம் போன்ற பரீட்சைகளில் சித்தியடைந்து இந்த அரங்கப் பிரவேசத்தை வெகுசிறப்பாக அவர் நிறைவு செய்தார். மேற்படி விழாவிற்கு பிரதம விருந்தினராக ஜேர்மனியின் நிருத்திய நாட்டியக்கலாலய அதிபர் நாட்டியக் கலைமணி, பரதசூடாமணி திருமதி. அமலா அன்ரனி சுரேஸ்குமார் அவர்கள் வருகைதந்திருந்தார்கள். சிறப்பு விருந்தினராக ஈக்காஸ் நோரபாடசாலை ஆசிரியை திருமதி இங்க குறோ அவர்கள் கலந்து கொண்டார்கள். சரியாக 16.00 மணிக்கு டென்மார்க் அருள்மிகு சித்திவிநாயகர் ஆலயக்குரு சிறீதரசர்மா சலங்கைபூஜையுடன் அரங்கேற்றத்தை ஆரம்பித்து வைத்தார்.

அதைத் தொடர்ந்து செல்வன் முகுந்தன் நாகேந்திரா தமிழிலும், செந்தூரா மாதவமேனன் டேனிசிலும் வரவேற்புரை நிகழ்த்தி அவையினரை வரவேற்றனர்.
இந்த நிகழ்ச்சிக்கு வாய்ப்பாட்டு இசைக்கலைமணி, இசைமாமணி திருமதி. குமுதா பிறித்விராஜன் அவர்கள் வழங்க, மிருதங்கம் சங்கீதரத்னம் திரு.ச.பிரணவநாதன், வயலின் நெய்வேலி எஸ். ராதாகிருஸ்ணன், வீணை செல்வி. கீதா சுவாமிநாதன், தம்புரா. செல்வி அர்ச்சனா செல்லத்துரை ஆகியோர் இசைத்தனர்.

ஒப்பனை திருமதி வசந்தா தனபாலன், ராணி மனோகரன் இணைந்து வழங்கினார்கள். நிகழ்வுகளை ஆசிரியர் கி.செல்லத்துரை, செல்விகள் பிரவீணா தனபாலன், ஜனனி பரமேஸ்வரன் ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள்.
பரதநாட்டிய அரங்கேற்றத்தின் நடன ஒழுங்குகள் ஒரு ஆலயத்தின் கோபுரம் போல கட்டமைவு பெறும் என்று பாலசரஸ்வதி சுட்டிக்காட்டியதை ஒப்பிட்டு இந்த நடன அரங்கேற்றத்தை பிரதமவிருந்தினர் வாழ்த்தினார். அத்தோடு சகல கலைஞர்களின் பணிகளையும் பாராட்டி இந்த அரங்கேற்ற நிகழ்வின் வெற்றிக்கு அவை எப்படியாக உறுதுணை சேர்த்தன என்றும் தமிழ்த் தோரணமாக எடுத்துரைத்தார். அதற்கமைவாகவே அன்றைய நடனங்களில் மூன்று முக்கிய கட்டங்களையும் வளர்ச்சியையும் அவதானிக்க முடிந்தது.

புஸ்பாஞ்சலி, கணேசவந்தனம், அலாரிப்பு முதல் கட்டமாக அமைந்தன. பின்னர் சப்தம், வர்ணம், கீர்த்தனை, பதம் ஆகியவை இன்னொரு படியாகவும், கந்துகநிருத்தம், தாயகநினைவு, தில்லானா, சாயிபஜன் ஆகியவை மூன்றாவது படியாகவும் அமைந்திருந்தன.
வழமையாக படிப்படியாக நடனத்தை வளர்த்துச் செல்லும் நடன ஆசிரியை திருமதி சுமித்திரா சுகேந்திரா இம்முறை முதலாவது நடனத்திலேயே வேகமான பாடல்களுடன் தனது பணியை ஆரம்பித்தார்.
ஆறுகட்டை சுருதியில் இசைக்கலைமணி, இசைமாமணி திருமதி. குமுதா பிறித்விராஜன் பல பாடல்கள் வீசிச் சென்றபோது பக்கவாத்தியக் கலைஞர்கள் பெரிதும் கவனமெடுத்து வாசித்து, கடினமான இசைப்பணியை கண்ணிமைக்காது, கருத்தோடு நிகழ்த்திச் சிறப்புச் சேர்த்தார்கள்.
அதேவேளை செல்வி. நீரஜா சிறீமுருகன் இந்த மூன்று முக்கிய படிமுறைகளையும் யாதொரு கங்கடமும் இல்லாமல் வெகு அநாயசமாக செய்து அவையின் பாராட்டைப் பெற்றார். வர்ணத்தில் அவர் காட்டிய பாவங்கள், கதையோட்டத்திற்கு ஒப்புவித்த உணர்ச்சி பேதங்கள், தூது இலக்கியத்திற்கு காட்டிய படபடக்கும் தவிப்பு, வீரமணிஐயரின் தாயக நினைவை விளக்கும் விரகவேதனைப் பாடலுக்குக் காட்டிய ஏக்கம் கலந்த சோகம், அங்க அசைவு, முத்திரை, நளினம், முகபாவ மாற்றம், களைப்பற்ற மகிழ்வு யாவுமே அவருக்கிருந்த ஈடுபாட்டை விளக்குவதாயிருந்தன.

அரங்கப்பிரவேசத்தை நிறைவு செய்தபோது அவை எழுந்துநின்று வானளாவிய வாழ்த்து கரகோசத்தை தொடர்ந்து வழங்கியது. அழகு தமிழில் அவர் வழங்கிய நன்றியுரை, நிறைவாக பெற்றோரிடம் பெற்ற ஆசிகள் யாவுமே சிறப்பாக அமைந்திருந்தன. நேரத்திற்கு தொடங்கி, நேரப்படியே யாவற்றையும் நடாத்தி குறித்த நேரத்தில் நிறைவு செய்தமை உட்பட அனைத்துமே பாராட்டும்படியாக அமைந்திருந்தன.
அலைகள் செய்திப்பிரிவு 12.09.04
அலைகள் செய்திப்பிரிவு 12.09.04
fredag den 21. december 2007
திசைகளும் தீபங்களும்
திரு.சிங்கை கிருஷ்ணன் திசைகளும் தீபங்களும்
நாம் அன்றாடம் காலையும் - மாலையும் பூசை அறையில் தீபம் ஏற்றி ஆண்டவனை வணங்குகிறோம். தினம் தீபம் ஏற்றும் நம்மில் எத்தனை பேருக்குத் தீபம் ஏற்ற வேண்டிய முறைகள் பற்றியும், அவை தரும் பலன்கள் பற்றியும் தெரியும் ?
தீபம் ஏற்றும்போது கிழக்குத் திசையில் உள்ள முகத்தை மட்டுமே ஏற்றினால் நம்மைத் தொடரும் துன்பங்கள் நீங்குவதுடன்மக்களிடையே நன்மதிப்பும் கிடைக்கும்.
மேற்குத் திசையில் உள்ள முகத்தை மட்டும் ஏற்றினால் சகோதரர்களிடையே ஒற்றுமை ஏற்படும்; கடன் தொல்லைகள் விலகும்.
சர்வ மங்களமும், பெரும் செல்வமும் வேண்டுவோர் வட திசையில் உள்ள முகத்தை ஏற்ற வேண்டும்.
தென் திசையில் உள்ள முகத்தை ஒருபோதும் ஏற்றக்கூடாது. எதிர்பாராத தொல்லைகளும், கடன்களும் பாவங்களும் கூடும்.
திரியில்லாமல் தீபம் ஏது? திரிகளின் வகைகளும் அவை தரும் பலன்கள் பற்றியும் பார்க்கலாமா?
சுகங்களைக் கூட்டும் தன்மை கொண்டதுதான் பஞ்சுத்திரி.
முற்பிறவியின் பாவங்களை அகற்றி- செல்வத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் தாமரைத் தண்டு திரி போட்டு விளக்கேற்ற வேண்டும்.
மழலைப் பேறில்லையே என ஏங்குவோர் வாழைத்தண்டு திரி போட்டு விளக்கேற்ற வேண்டும்.
செய்வினைகள் நீங்கவும், நீடித்த ஆயுள் பெறவும் வெள்ளெருக்குப் பட்டைத் திரியில் விளக்கேற்ற வேண்டும். முழுமுதற் கடவுளான கணேசப் பெருமானுக்கும் உகந்தது இது.
தம்பதிகள் மனமொத்து வாழவும் - மகப்பேறு பெறவும் மஞ்சள் நிறங்கொண்ட புதிய திரி போட்டு விளக்கேற்ற வேண்டும்.
திரியுடன் எண்ணையிட்டால்தானே தீபம் எரியும்?
எந்த எண்ணையிட்டாலும் விளக்கு எரியும்தான். ஆனால் பலன்...?நலம் வேண்டி நாம் விளக்கேற்றும்போது அதில் விடும் எண்ணையினால் பலன்கள் நேரெதிராகவும் வாய்ப்புகள் உண்டே?
ஏதோ இருக்கும் எண்ணையை ஊற்றி விளக்கு ஏற்றுதல் என்பது மிகவும் தவறான ஒன்று.
கிரக தோஷங்கள் விலகி சுகம் பெற சுத்தமான பசு நெய்யினால் தீபம் ஏற்ற வேண்டும்.
கணவன் மனைவி உறவு நலம் பெறவும், மற்றவர்களின் உதவி பெறவும் வேப்பெண்ணை தீபம் உகந்தது.
அவரவர்கள் தங்கள் குல தெய்வத்தின் முழு அருளையும் பெற வழி செய்வது மணக்கு எண்ணை தீபம்.
எள் எண்ணை (நல்லெண்ணை) தீபம் என்றுமே ஆண்டவனுக்கு உகந்தது; நவக்கிரகங்களைத் திருப்தி செய்யவும் ஏற்றது.
மனதில் தெளிவும், உறுதியும் ஏற்பட வேண்டுவோர் சுத்தமான தேங்காய் எண்ணை கொண்டு தீபமேற்ற வேண்டும்.
செல்வங்கள் அனைத்தையும் பெற விரும்புவோர் வேப்பெண்ணை, இலுப்பை எண்ணை, நெய் மூன்றையும் கலந்து தீபம் ஏற்ற வேண்டும்.
மந்திர சித்தி பெற வேண்டுவோர் விளக்கெண்ணை, இலுப்பை எண்ணை, நெய், நல்லெண்ணை, தேங்காய் எண்ணை ஆகிய ஐந்து எண்ணைகளையும் கலந்து விளக்கேற்ற வேண்டும்.
கடலை எண்ணை, கடுகு எண்ணை, பாமாயில் போன்றவைகளைக் கொண்டு ஒருபோதும் விளக்கேற்றவே கூடாது. மனக்கவலையையும், தொல்லைகளையும், பாவங்களையுமே பெருக்க வல்லவை இந்த எண்ணையின் தீபங்கள்.
எண்ணெய்க் குளிப்பு!
எண்ணெய்யை சாதாரணமாக பலர் நினைத்துள்ளனர் தண்ணீரைப் போல்.அரபு நாடுகள் இன்று தலை நிமிர்ந்து நிற்க காரணம் எண்ணெய்.
தண்ணீரும் ஒரு அரிய பொருளாகப் போகிறது.
சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த ஒரு ஆராய்ச்சியில் ஒரு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.இந்தியாவில் உள்ள கங்கை நதி, சீனாவின் வடக்குப்பகுதியிலுள்ள நதி மற்றும் மெக்சிகோ,ஜோர்டான், அரேபியா, அமெரிக்காவின் தென் பகுதியிலுள்ள நதிகள் எல்லாம் ' என்றும்வற்றாத ஜீவ நதிகள்' என்று கூறப்பட்டது. கங்கை போன்ற நதிகளின் நீர் நிலைவற்றிக்கொண்டிருக்கிறது. இன்னும் 30 ஆண்டுகளில் இந்தப் பகுதியில் கடுமையான தண்ணீர்பஞ்சம் வரப்போகிறது. குடி நீர் கிடைக்காது. உலகத்தில் மிகப்பெரிய நதியான நைல்நதியைப் போல் 20 நைல் நதிகள் அளவு தண்ணீர் வந்தால்தான் மக்களை காப்பாற்ற முடியும்.
இனி எண்ணெய்:
ஞாயிறு குளித்தால் வடிவமும் அழகும் போய்விடும்.திங்கள் குளித்தால் அதிகப் பொருள் சேரும்.செவ்வாய் குளித்தால் துன்பம் வரும்புதன் குளித்தால் மிக புத்தி வந்திடும்.வியாழன் குளித்தால் உயரறிவு போய்விடும்.வெள்ளி குளித்தால் செல்வம் மிகும்.சனி குளித்தால் ஆயுள் அதிகமாகும்.
* மேற்கண்டவை யாவும் பெண்களுக்கு. ஆண்கள் சனி , புதன் எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லது
* ஆண்களுக்கு, திங்கட் கிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் முடக்கு வாதம் வரும்செவ்வாய் கிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் முதுகு பாலை நோய் வரும்.விழாயக்கிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் கால் குடைச்சல் வரும்.வெள்ளிகிழமை எண்ணெய் தேய்த்து குளித்தால் முட வாதம் வரும்.
[ இதனை.'' அறப்பளீகர சதகம் '' கூறுகிறது.]
* இனி எண்ணெய் தேய்த்து குளிக்க முயலும் - அல்லது நினைக்கும் இணையஅன்பர்கள் தனக்கு தேவையான - தனக்கு வேண்டிய நாட்களை தேர்தெடுத்துக் கொள்ளவும்.எண்ணெய் தேய்த்து குளிப்பதால் ஏற்படும் பலன் இணைய அன்பர்கள் பலரும் அறிந்திருப்பதால் அதனை தவிர்த்துவிட்டேன்.
நம் முன்னோர்கள் சனியையும், புதனையும் ஏன் தேர்தெடுத்தார்கள். மற்ற செல்வங்களை விடஅறிவினையும், உடல் நலத்தினைத்தான் உயர்வாக நினைத்தார்கள் - மதித்தார்கள்.
எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது குளிர்ந்த நீரில் குளிக்கக் கூடாது.வெதுவெதுப்பான சுடுநீரில்தான் குளிக்கவேண்டும்.
எண்ணெய் என்று வரும் போது அதன் தொடர்பான வேறு சில விழயங்களையும் இத்துடன்இணைத்துவிடுகிறேன்.
திசைகளும் - தீபங்களும்:
நெய்:தீபத்திற்கு [விளக்கிற்கு] நெய்விட்டு தீபம் ஏற்றுவது மிகச் சிறப்பு. சகலவித செல்வ சுகத்தையும் இல்லத்திற்கும் - இல்லறத்திற்கும் நலனை தருகிறது.
நல்லெண்ணெய்:நல்லெண்ணெயில் தீபமிடுவதால் சகல பீடைகளும் விலகிவிடும்.
விளக்கெண்ணெய்:தேவதா, வசியம், புகழ், ஜீவன சுகம், சுற்றத்தார் சுகம், தாம்பத்திய சுகம் விருத்தி செய்கிறது.
திரியின் வகையில் பஞ்சுஇலவம் பஞ்சு திரித்துப் போடுவது மிகவும் நல்லது.
தாமரைத் தண்டு:தாமரை தண்டு திரிந்து ஏற்றுவது முன் வினைப் பாவத்தைப் போக்கும்.செல்வம் நிலைத்து நிற்கும்.[ வாழை தண்டில் திரியிலிடுவது சிறப்பு]
துணி:புது வெள்ளை துணியில் [அல்லது வெள்ளை வேட்டி] பன்னீரில் நனைந்து காயவைத்து திரியாக பயன் படுத்த உத்தம பலனை காணலாம்.
திசைகளும் பலனும்
கிழக்குகிழக்கு திசை தீபம் ஏற்றி வழிபட்டால் துன்பம் ஒழியும் , பீடைகள் அகலும்.
மேற்கு:மேற்கு திசையில் தீபம் ஏற்றி வழிபடக் கடன் தொல்லை , சனி பீடை, கிரக தோஷம்நீங்கும்.
வடக்கு:வட திசையில் தீபம் ஏற்ற திரண்ட செல்வமும், திருமணத் தடையும், சுபகாரியத் தடை,கல்வி தடை நீங்கும். சர்வ மங்களமும் உண்டாகும்.
வேப்பெண்ணை, நெய், இலுப்பை எண்ணெய் இவை மூன்றும் கலந்து தீபமிடுவதனால்செல்வம் உண்டாகும். இது குல தெய்வத்திற்கு உகந்தது.
நெய், விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய், இலுப்பை எண்ணெய், தேய்காய் எண்ணெய்இந்த ஐந்து எண்ணெய் சேர்கையில் 45 நாட்கள் பூசை செய்கிறோரோ அவருக்கு தேவியின் அருள் சக்தி உண்டாகும்.
இறைவனுக்கு உகந்த எண்ணெய்:
மஹாலட்சுமி : நெய்.நாராயணன் : நல்லெண்ணெய்
fredag den 7. december 2007
lørdag den 1. december 2007
நிஜத்தைத் தேடி சிறுகதை சுஜாதா
கல்யாணமாகி ஒன்பது வருஷத்துக்குப் பிறகு ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை கிருஷ்ணமூர்த்தியும் சித்ராவும் ஹாலில் எதிர் எதிரே உட்கார்ந்திருந்தார்கள்.பழக்கப்பட்ட மௌனம்.கிருஷ்ணமூர்த்தி செய்தித்தாள் படித்துக்கொண்டிருக்க சித்ரா குக்கர் சப்தம் வரக் காத்திருக்கும் நேரத்தில் தொடர்கதை படித்துக் கொண்டிருந்தாள்.மர கேட்டைத் திறக்கும் சப்தம் கேட்டது.ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தான்.சுமார் முப்பது வயது இருக்கக் கூடிய ஒருவன் கையில் தட்டுடன் காலில் செருப்பின்றி தோட்டத்தில் நடந்து வந்தான்."யாரு?" என்றான்.சற்றுத் திடுக்கிட்டு கிருஷ்ணமூர்த்தியைப் பார்தது தன் சோகக் கதையை காப்ஸ்யூல் வடிவத்தில் சொன்னான்: "ஊருக்குப் புதுசுங்க.வேலை தேடி வந்தேங்க .என் மனைவி காலைல இறந்து போய்ட்டாங்க பிணம் கிடக்குதுங்க .எடுக்கக் காசில்லை. பெரிய மனுசங்க உதவி பண்ணணும்" அவன் வைத்திருந்த தட்டில் சில ரூபாய் நோட்டுக்கள் இருந்தன.எதற்கோ புஷ்பங்கள் இருந்தன. ஒரு ஊதுவத்தி புகைந்து கொண்டிருந்தது.
"பாத்தியா விமலா! இந்தக் குழந்தைங்க படற அவஸ்தையை" என்பதுடன் கதையை நிறுத்திவிட்டு சித்ராவும் எட்டிப் பார்த்தாள்.
அவன் முகத்தில் மூன்று நாள் தாடி. கண்களில் தேவைக்குப் போதுமான சோகம் "என்னவாம்" என்றாள்.
அவன் "ஊருக்குப் புதுசு வேலை தேடி வந்தேங்கம்மா" என்று துவங்கி மறுபடி அத்தனையும் சொன்னான்.
மனைவியின் மரணம் என்பது உடனே கேட்டவனை உலுக்கிவிடக்கூடிய சோகம். உடனே உள்ளே போய் பணம் எடுத்துக் கொடுக்கவேண்டியதுதானே? கிருஷ்ணமூர்த்தி அபபடிச் செய்யவில்லை. செய்யமாட்டான்.எதையும் விசாரிப்பான். சித்ராவுக்குத் தெரியும்.
"வீடு எங்கே" என்றான்
"இஙகதான் ஸார் கோகுலா பக்கம். தெரிஞ்சவங்க வீட்டில நிகழ்ந்து போச்சுங்க" "சரி அட்ரஸ் சொல்லு"
"போனாப்போறது எதாவது கொடுத்து அனுப்பிடுங்களேன்" என்றாள் சன்னமாக "இரு"
"நான் இங்க பெங்களுர் வந்தே மூணே நாள்தான் ஆவறது ஸார்!காலைல இறந்துட்டா" "சரிதாம்பா,அட்ரஸ் என்ன? சொல்லேன்!"
அவன் சற்றே யோசித்து "மூணாவது கிராஸ்"என்றான் "மூணாவது க்ராஸ்னா?எச்.எம்.ட்டி லே அவுட்டா?சுந்தர் நகரா? இல்லை கோகுலா காலனிக்குள்ளயா?"
"சொல்லத் தெரியலிங்களே,சினிமா தியேட்டர் பக்கததில""அவனோட என்ன வாக்குவாதம்?""இப்ப நீ சும்மா இருக்கப் போறியா இல்லையா? எந்த சினிமா தியேட்டர்யா?""என்ன ஸார் இப்படி கேக்கறிங்க இருக்கறதே ஒரு சினிமா தியேட்டர் தானே! பேர் தெரியாதா உங்களுக்கு?"
"எனக்குத் தெரியும். நீ சொல்லு"அவன் மறுபடியும் அனுபல்லவியைப் பிடித்தான் "பங்களூர் வந்தே மூணு நாள் ஆவுது ஸார் காலைல இறந்துட்டா"
"சரிப்பா.எந்த இடம்? அதைச் சொல்ல மாட்டியா?""என்ன ஸார்,பெண்டாட்டி செத்துப் போன துக்கத்தில இருக்கேன்,என்ன என்னவோ போலிஸ்காரங்க மாதிரி கேக்கறிங்களே. காசு கொடுக்க முடியும் இல்லைன்னு சொல்லிடுங்க, நான் போவணும்.பிணம் கிடக்கு அங்கே!""அட்ரஸ் சரியா சொல்லு தரேன் ""அதான் சொன்னேனே""சரியா சொல்லு""அய்யோ" என்றான் ."வேண்டாம் ஸார்.என்ன நீங்க"சித்ரா எதிர்பார்த்தாள்."என்ன ஒரு மனிதாபிமானமில்லாத ஆசாமி அய்யா நீ" என்று திட்ட ஆரம்பிப்பான் என்று நிச்சயம் எதிர்பார்த்தாள். அவன் அப்படிச் சொய்யாமல் திடுதிப்பென்று அழ ஆரம்பித்தான் . தட்டைக் கை மாற்றிக்கொண்டு மௌனமாக அழுதான்."வரேன் ஸார்" என்று திரும்பி நடந்தான். போகும்போது வாசல் கேட்டைத் தாளிட்டுவிட்டுச் சென்றான். கிருஷ்ணமூர்த்தி இந்தச் செயலை எதிர பார்ககவில்லை "போய்ட்டான்" என்றான். "கூப்பிடுங்க அவனை!" என்றாள் சித்ரா."எதுக்கு? எல்லாம் பாசாங்கு. தெரியுமோல்லியோ?""ப்ளீஸ். அவனைக் கூப்பிடுங்கோ. கூப்ட்டு எதாவது கொடுத்து அனுப்பிடுங்கோ" கிருஷ்ணமூர்த்தி சிரித்து வெளியே பார்த்தான்.சற்று தூரத்தில் அவன் தெரிந்தான்.இன்னும் அழுது கொண்டே சட்டையால் முகத்தைத் துடைத்துக்கொண்டே சென்று மறைந்தான். "அவன் சொல்றது உண்மையா இருந்தா பளிச்சுன்னு அட்ரஸ் சொல்லியிருப்பானோ இல்லியோ? ஏன் தயங்கணும் ? அட்ரஸ் சரியா சொல்லிருந்தா நான் கொடுத்திருக்க மாட்டேனோ?"என்றான் "அவன்தான் ஊருக்குப் புதுசுங்கறானே.சரியா அட்ரஸ் சொல்லத் தெரியலையோ என்னவோ" "சேச்சே உனக்குத் தெரி‘யாது சித்ரா, இது பெரிய்ய ரேக்கெட்.அவனைப் பார்த்தான மனைவி செத்துப் போனவன் மாதிரியா இருந்தது? திருதிருவென்று முழிச்சானே""எனக்கென்னவோ அப்படிப் படலை.எதுக்கு அழுதான்?""அதுவும் அவனுடைய நாடகத்தில ஒரு பகுதி""ஏதாவது கொடுத்திருக்கலாம், பா..வம்""மறுபடியும் மறுபடியும் அசட்டுத் தனமா பேசறியே. வெளி உலகத்தில எத்தனை பொய் இருககு தெரியுமா? எவ்வளவு ஏமாத்து வேலைகள்? வீட்டுக்குள்ளயே இருக்கறவ நீ. ரொமபப் பித்தலாட்டம் நடக்குது தெரியுமா?""எனக்கு அவன் மூஞ்சியைப் பார்த்தா பொய் சொல்றவன் மாதிரி தெரியலை" "உனக்கு அந்த அறிவு போறாது""சரி போதாதுன்னு வெச்சுக்கலாம் அவன் பொய் சொல்றான்னே வெச்சுக்கலாம்.ஒரு ரூபா ரெண்டு ரூபா கொடுத்தா என்ன தேஞ்சா போய்டுவோம்?எவ்வளவு செலவழிக்கிறோம் கன்னா பின்னான்னு"
"அது வேற விஷயம். வீடு தேடி வந்து ஆளுங்களை முட்டாள் அடிக்கிறவனுக்கு நாம ஹெல்ப் பண்ணணுமா என்பதுதான் ப்ரச்சனை. இப்ப அவன் நேர வந்து'ஸார் நான் ஒரு ஏழை, அடுத்த வேளை சோத்துககு காசில்லை'ன்னு யோக்கியமா வந்து கேட்டிருந்தா ரெண்டு ரூபா என்ன அஞசு ருபா கூட கொடுப்பேன் அதை விட்டுட்டு அனியாயத்து•கக பெண்டாட்டி செத்துப்போனதா சரடு விட்டுட்டு சாவுன்ன உடனே கேள்வி கேக்காம தந்துருவாங்கன்னு ஒரு கதையை ஜோடிச்சு... என்ன ஒரு பித்தலாட்டடம் பாத்தியா இதை எப்படி நாம என்கரேஜ் பண்ண முடியும்? சொல்லு."
சித்ராவுக்கு எத்தனையோ சொல்ல வேண்டும் போலிருந்தது அவன் முகத்தில் பொய்யில்லை என்று சொல்ல வேண்டும் நியாயமாகவே அவனுக்கு இருந்த சோகத்தில் புதுசாக சரணடைந்த வீட்டின் விலாசத்தை சொல்வதில் கழப்பம் இருந்திருக்கலாம் என்று, நீங்க செஞ்சது எனக்கு கட்டோடு பிடிக்கவில்லை என்று , சொன்னால் வாக்குவாதம் வரும் சண்டை வரும் எக்கேடு கெட்டுப்போ என்ற சாப்பிடாமல் வெளியே போய்விடுவார் குக்கர் பெருமூச்சுவிட்டது. சித்ரா உள்ளே சென்றாள்.
கிருஷ்ணமூர்ததி செய்தித் தாளில் ஆழ்ந்தான். நியுஸ்ப்ரிணட் வார்த்தைகளில் அவன் கவனம் நிலைக்கவில்லை.. தான் செய்தது சரிதான் என்பது அழுத்தமாக ஏன் இவளுக்குப் புரியவில்லை? சுளித்துக் கொண்டு உள்ளே சென்றதிலேயே ஏமாற்றத்தைக் காட்டினாளே அவளுக்கு என்ன தெரியும். இங்கிருந்து பேசினான்-
"இப்படித்தான் ஒரு தடவை திருப்பதிக்கு போறேன்னு ஒரு அம்மா மஞ்சள் புடவையோட வந்து அஞ்சு ருபா வாங்கிண்டு போனாளே! என்ன ஆச்சு? தியேட்டர்ல பார்க்கலை நாம?""ஆமாம்""அப்புறம் அனாதைப் பள்ளிக்கூடம் நடத்தறோம்னு நோட்டீசு ரžது புஸ்தகம் எல்லாம் அடிச்சுண்டு ஒருத்தன் வந்தானே என்ன ஆச்சு?""என்ன ஆச்சு" என்றாள் உள்ளிருந்து"அந்த மாதிரி தெருப் பேரே இந்த ஊர்ல இல்லைன்னு கண்டு பிடிச்சுக் காட்டினேனே இல்லையா?" "ஆமாம் ஞாபகம் இருக்கு""அப்படி யெல்லாம் சுலபமா ஏமாறக்கூடாது பத்து ரூபாய்க்காக பெத்த தாயையே செத்துப் போனதா சொல்லிடுவாங்க. இந்த உலகத்தில எத்தனை பொய் இருக்கு தெரியுமா சித்ரா?" சித்ராவிடமிருந்து பதில் வரவில்லை"சித்ரா?"பதில் இல்லைகிருஷ்ணமூர்த்தி பேப்பரை மடித்து வைத்துவிட்டு சமையலறைப் பக்கம் சென்றான்.சித்ரா அடுப்படியில் அழுது கொண்டிருந்தாள்.
திடுக்கிட்டான்."இப்ப எதுக்காக அழறே?"அவசரமாக கண்ணைத் துடைத்துக் கொண்டாள்."எதுக்கா இப்ப அழுகைன்னு கேக்கறேன்" என்று அதட்டினான் "ஒன்றுமில்லை""பொய் சொல்லாதே நான் அவனை விரட்டினதுக்காகவா?""இல்லை..இல்லை" விசம்பல்களுக்கிடையே சொன்னாள்."எனக்கென்னவோ அவன் பொய் சொல்லலைன்னு தோணித்து அவன் திடீர்னு அப்படி விக்கி விக்கி அழுததை நினைச்சுண்டேன் யாரோ ஒரு ஜ“வன் ஏதோ ஒரு துக்கம் அதை எனக்கும் கொஞ்சம் கொடுத்துட்டுப் போய்ட்டாப்போல ஆய்டுத்து""எல்லாம் பொய்னு எத்தனை தடவை சொல்றது""எப்படித் தெரியும் உங்களுக்கு" என்று தன்னியல்பாகக் குரலை உயர்த்திக் கேட்டாள். அவன் அவளை உக்கிரமாகப் பார்த்தான்."எப்படித் தெரியுமா ? சொல்றேன். அனுபவம்டி .வெளில எனக்கு ஏற்பட்ட அனுபவம். சித்ரா நீ எல்லாத்தையும் இமோஷனலா பார்க்கறே அதான் உங்கிட்ட தப்பு. நான் ப்ராக்டிக்கலா பார்ககறேன்"
"சரி, நீங்க சொல்றதுதான் சத்தியம். நான் அழலை" என்றாள். "ஆனா" "என்ன சொல்லு. மனசில நினைச்சிண்டிருக்கிறதை சொல்லிடு" "நீங்க சொல்றாப்போல நிறையப்பேர் பொய் சொல்றா ஏமாத்தறா தப்பிப்போய் இவன் சொன்னது மட்டும் நிஜமா இருந்து தொலைச்சுடுத்துன்னா.. அவ்வளவு துக்கத்தில இருக்கிறவனை வாசல்ல நிக்கவெச்சு கேள்வி கேட்டு மடக்கி அவனும் சொல்லத் தெரியாம முழிச்சு காசும் கொடுக்காம துரத்திட்டமே அது தப்பில்லையா? எதுக்காக கேள்வி கேட்கணும் அவனும் பொய் சொல்றான்னா எக்கேடு கெட்டுப் போகட்டும்னு ரெண்டு ரூபாய் கொடுத்திருந்தா இத்தனை.." "மறுபடியும் மறுபடியும் அதையே சொல்றியே ரெண்டு ரூபாய் பெரிசில்லை எனக்கு சித்ரா ப்ரின்சிப்பிள் அதான் முக்கியம்!"
"சரி" என்றாள் சுருக்கமாக. சற்று நேரம் மனைவியையே பார்த்தான்."ஆல்ரைட் உனக்கு இன்னும் சமாதானமாகலை.ஒண்ணு செய்யறேன் அவன் என்ன சொன்னான்? தியேட்டர் பக்கத்தில மூணாவது கிராஸ்னுதானே? தியேட்டர் கிட்டத்தில்தான் இருக்கு மூணாவது கிராஸ் போய் அங்க இருக்கானான்னு விசாரிச்சுண்டு வந்துடலாம் வா! அப்பதானே உனக்கு நிம்மதி ஆகும் ? வா காரை எடுத்துண்டுபோய் ஒரு நிமிஷம் பாத்துட்டு வந்துரலாம்" "வேண்டாம். நீங்க சொன்னது எனக்கு கன்வின்ஸ் ஆய்டுத்து.நான் ஏதோ பைத்தியக் காரத் தனமா அழ ஆரம்பிச்சுட்டேன்.""இல்லை நீ கன்வின்ஸ் ஆகலை. நான் சொன்னது சரின்னு உனக்கு இன்னும் புரிபடலை" "நான் வரலை! எனக்கு நிறைய வேலை இருக்கு""நீ வரலைன்னாக் கூட நான் போய்ப் பார்க்கத்தான் போறேன்""எதுக்காக விதண்டாவாதம் மறங்க""இல்லை இந்த கேஸ’ல யார் சரின்னு பார்த்தாகணும் நீயா நானா""நீங்க சொன்னதுதான் சரி ஒப்புத்துண்டுட்டேனே""நீ இன்னும் மனசார ஒப்புததுக்கலை. உனக்கு ப்ரூஃப் வேணும்தானே நான்போய்ப் பார்த்துட்டு வந்துடறேன்""இது என்ன பிடிவாதம் நீங்க அங்க போய் அவன் சொன்னது நிஜம்னே தெரிஞ்சா என்ன செய்யப்போறிங்க""தோல்வியை ஒப்புத்துண்ணடு பத்து ருபா அல்லது பதினஞ்சு ரூபா கொடுத்துட்டடு வந்துருவேன் ஆனா அப்படி நடக்காது லைஃப்ல நிறைய பார்த்துட்டேன் சித்ரா""அவ்வளவு ஷ்யுரா இருந்தா எதுக்குப் போகணும்""உனக்காகத்தான் சித்ரா நீ அருவியா அழுத பாரு? அது தப்புன்னு ஸ்தாபிக்கிறதுக்கு" "எனக்கு இப்ப சிரிப்பு வரது""அப்புறம் சிரிக்கப் போறது யாருன்னு சொல்றேன்"
கிருஷ்ணமூர்த்தி ஷெட்டை திறந்து பெரிய கேட்டைத் திறந்து காரைக் கிளப்பி žறிப் புறப்பட்டான் தியேட்டர் ஒரு மைலுக்குள் இருக்கும். நிச்சயம் போய்ப் பார்த்து விடவேண்டும் மூணாவது கிராஸ் என்று தானே சொன்னான் ? என்னை என்னவென்று நினைத்துக் கொண்டாள் கருணை இல்லாதவன் என்றா? இவளுக்கு என்ன தெரியும் கேள்வி கேட்காமல் காசை சமர்ப்பிக்க நான் என்ன முட்டாளா? அழு மூஞ்சி இப்படித்தான் ஒரு தடவை...
தியேட்டருக்கு அருகில் மூன்றாவது கிராஸ் இருந்தது. அதில் திரும்பியதும் வெறிச் சென்ற அந்த சிறிய தெரு பூராவும் தெரிந்தது. தெருவின் நடுவில் ஒரு சட்டி வைக்கப்ப்டடு அதனுள் நெருப்பு புகைந்து கொண்டிருந்தது.பச்சை மூங்கில்கள் காத்திருந்தன.ஓரத்தில் தலையில் கை வைத்துக்கொண்டு அவன் மண்ணில் உட்கார்ந்திருந்தான். கிருஷ்ணமூர்த்தி சற்று நேரம்தான் தயங்கினான். காரை ரிவர்ஸ் செய்தான் .žறிப் புறப்பட்டான், திரும்பவும தன்வீட்டை நோக்கி.
"என்ன ஆச்சு?" என்றாள் சித்ரா அசுவாரஸ்யமாக "நான் சொன்னது சரியாப்போச்சு அவன் சொன்ன மூணாவது க்ராஸ் முழுக்க விசாரிச்சுப் பார்த்துட்டேன் ஒண்ண்ணும் இல்லை""அப்படியா? அப்பா! எத்தனை பொய்!" என்றாள் சித்ரா.
(முற்றும்)

Abonner på:
Opslag (Atom)